மதுரையில் உள்ள ஜமீன்தார் திருமலைநாயக்கர் குடும்பத்தை சேர்ந்த சிறுபாலநாகம்மாள் என்ற பெண், சீப்பாலக்கோட்டையில் தங்கியிருந்தனர். அக்காலத்தில் சீப்பாலக்கோட்டைதான் சுற்று கிராமத்திற்கு இது ஒரு வியாபார தளமாக இருந்தது. காக்கா தோப்பு என்ற இடம் உள்ளது. அங்கு தான் சந்தையில் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்று சென்றனர். சிறுபால நாகம்மாள் மதுரைக்கு பொருள்களை பெற்று சென்றார். முதலில் சீப்பாலக்கோட்டைக்கு தலித் மக்கள் குடிவந்தனர். பின்புதான் அனைத்து ஜாதியினர் நாயுடு, கவுண்டர் குடிவந்தனர். இக்கிராமத்திற்கு நெருஞ்சி அடைக்கான் ஒரு குடும்பம் மட்டுமே தலித் மக்களாக இருந்தனர். மற்ற இனத்தவர் வெளியூருக்கும் மலைகளுக்கு சென்று விட்டனர். சிறு கால இடைவெளிக்கு பின்பு மற்ற மக்கள் குடிவந்தனர். பின்பு சிறுபாலநாகம்மாள் மதுரையில் இறந்து விட்டார். சிறுபால நாகம்மாள் தங்கி இருந்ததால் சீப்பாலக்கோட்டை என்று பெயர் வந்தது.
• Monday, June 11th, 2012
Category: சீப்பாலக்கோட்டை
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
Responses are currently closed, but you can trackback from your own site.